News March 24, 2025
IPL 2025: அம்பயர்களின் ஒரு மேட்ச் சம்பளம் தெரியுமா?

IPL வீரர்களின் சம்பளம் குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அம்பயர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என யோசித்தது உண்டா? IPL தொடரில் அம்பயர்கள் Elite மற்றும் Developmental Umpires என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில், Elite Umpires ஒரு போட்டிக்கு ₹1,98,000 பெறுகின்றனர். Developmental Umpires ஒரு போட்டிக்கு ₹59,000 பெறுகின்றனர். இதுல சேர்ந்துடலாம் போலயே.
Similar News
News March 29, 2025
4 சுவர்களுக்குள் விஜய்யின் அரசியல்: கே.பி.முனுசாமி தாக்கு

விஜய் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த அதிமுக, நேற்றைய விஜய்யின் பேச்சுக்குபின், அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். விஜய் மக்களை சந்திக்காமல், 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுகால அரசியலை முடித்துவிட்டார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அவர் மக்களை சந்தித்தால்தான் அரசியலை புரிந்துகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News March 29, 2025
சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஏழரை சனி

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று இரவு 11.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இன்று முதல் அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடைபெறவுள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கும், கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கும் ஏழரை சனி நடைபெறவுள்ளது. 2027ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கு ஏழரை சனி தொடங்கும்.
News March 29, 2025
யாரும் நிகழ்த்தாத சாதனை… SIR ஜடேஜாவின் மாஸ்!

இதுவரை, IPL தொடரில் 3000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர் என்ற வரலாற்றை ஜடேஜா படைத்துள்ளார். அவர் இதுவரை, 242 போட்டிகளில் 3,001 ரன்களும், 160 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டரான ஜடேஜா சென்னையின் அணியின் முக்கிய தூணாகவே இருக்கிறார்.