News March 24, 2025
ரூ.1770 கட்டணத்தில் நீச்சல் பயிற்சி

நாகை மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோருக்கு தகுந்த பாதுகாப்பு வசதியுடன் 5 கட்டங்களாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி உட்பட ரூ.1770 மட்டுமே பெறப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
Similar News
News August 22, 2025
நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவானது வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 29-ந்தேதி அன்று ஒருநாள் மட்டும் நாகை மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஈடுசெய்ய செப்டம்பர் 13-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
ரவுடிகள் மீது கடும் நடவடிக்க எடுக்க போலீஸ் சூப்ரண்ட் உத்தரவு

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
இதில், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது பின்னர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளசாராயம் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் ரவுடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எஸ்.பி.செல்வகுமார் உத்தரவிட்டார்
News August 21, 2025
நாகை மக்களே.. சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

நாகையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு www.<