News March 24, 2025
இந்தியாவின் உயரமான கட்டடம் எது தெரியுமா?

உலகின் உயரமான கட்டடம் எதுவென்று கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு துபாய் புர்ஜ் கலிஃபா என்று சொல்லி விடுவோம். அதன் உயரம் 2,717 அடி. இந்தியாவின் உயரமான கட்டடம் எங்கு இருக்கிறது தெரியுமா? மும்பை பலாய்ஸ் ராயல் டவர்தான் அது. 2018ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம், 1,050 அடி உயரத்தில் 88 தளங்களை கொண்டதாகும். இந்த பில்டிங் மேல இருந்து இன்னைக்கு குதிச்சா, நாளைக்குத்தான் கீழ வந்து சேருவோம் போல!
Similar News
News March 29, 2025
தோனியை கேலி செய்த சேவாக்

RCBக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 9வது வீரராக களமிறங்கிய எம்.எஸ்.தோனியை, வீரேந்திர சேவாக் கிண்டல் செய்துள்ளார். ரொம்ப சீக்கிரமாகவே பேட்டிங்கிற்கு தோனி வந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். வழக்கமாக 19 அல்லது 20வது ஓவர் வரும் தோனி ஏன் 16ஆவது ஓவரில் வந்தார் என கமெண்ட் அடித்துள்ளார். அதனுடன் தோனி வேகமாக வந்தாரா? இல்லை விக்கெட் அவ்வளவு வேகமாக விழுந்ததா? எனவும் நையாண்டி செய்துள்ளார்.
News March 29, 2025
கஞ்சா வியாபாரி என்கவுண்ட்டரில் கொலை

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வாரம் காவலர் முத்துக்குமரன் கஞ்சா வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியபோது, பொன்வண்ணன் அவரை கல்லால் அடித்துக் கொன்றார். இதனையடுத்து, கம்பம் அருகே காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
News March 29, 2025
கத்தியை காட்டி இன்ஸ்டா ஐடி கேட்ட சிறுவர்கள்!

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என பொது இடங்களில் பெண்கள் தேடி அலைந்த காலம் போய், இன்ஸ்டாவில் தேட தொடங்கிவிட்டனர் இளைஞர்கள். இன்ஸ்டாவிலேயே பார்த்து பேசி பழகி, காதலித்து திருமணம் செய்த கதையெல்லாம் பல நடந்துவிட்டன. சென்னையில், ரோட்டில் திடீரென 2 பள்ளி மாணவிகளை வழிமறித்து இன்ஸ்டா ஐடி கேட்டு இரு சிறுவர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால், கிடைத்தது, சிறைவாசம் தான். ஏன்டா உங்க புத்தி இப்படி போயிட்டு இருக்கு!