News April 1, 2024
ஶ்ரீவைகுண்டம்: மீண்டும் மோடி பிரதமர் ஆவார்

ஶ்ரீவைகுண்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தாமாகா கட்சி வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது “மீண்டும் மோடி பிரதமராக வருவார். அப்போது இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் மாறும்” என்று அவர் தெரிவித்தார்.
Similar News
News April 13, 2025
புத்தாண்டில் இங்கு வழிபாட்டால் பிரச்சனைகள் வராது !

தமிழ் புத்தாண்டு அன்று இந்துக்கள் முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் புத்தாண்டு அன்று வழிபாடு செய்ய சிறந்த கோயில் ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோயில் என்று ஆன்மீகச் சான்றோர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் விநாயகர் கோயில் என்ற பெருமையை பெற்ற இக்கோயிலில் வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சனை, வழக்கு பிரச்சனைகள் இருக்காது என்பது ஐதீகம்.
News April 13, 2025
மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் ஷீலா ஸ்டீபன் தெரிவித்துள்ளார். கோடைகால பயிற்சியில் விளையாட்டுக்களான தடகளம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து போன்ற பயிற்சிகள் வருகிற மே 1 முதல் 16 தேதி வரை நடைபெற உள்ளது. காலை, மாலை என இரு வேளை நடைபெற உள்ளது. தொடர்புக்கு 95787 83632 அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*
News April 13, 2025
தூத்துக்குடி:திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இதை ஷேர் செய்யுங்கள்.