News March 24, 2025
போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
Similar News
News April 13, 2025
சிவன்மலை முருகன் கோயில்!

திருப்பூரில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
News April 13, 2025
திருப்பூர்: ஆசிரியர் வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர் பல்லடத்தில், மாநில அளவிலான, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, மாபெரும் ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் நடத்தும் இந்த முகாம், கண்ணம்மாள் நேஷனல் பள்ளியில், வரும் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் கலந்து கொண்டு, ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதை SHARE பண்ணுங்க.
News April 13, 2025
திருப்பூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

திருப்பூர், மூலனூர் அருகே உள்ள கரைப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (55). இவர் நேற்று காலை பெரமியத்தில் உள்ள, ஒருவரின் தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரங்களில், தேங்காய் வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தென்னை மரத்தின் அருகில் சென்ற மின்சார கம்பியில், கொக்கி உரசியுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராமசாமி, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.