News March 24, 2025
இராமநாதபுரத்தில் கதவுகள் இல்லாத கிராமம்

ராமநாதபுரம், அபிராமம் அருகே பாப்பணம் கிராமத்தில் எந்தவொரு வீட்டிற்கும் கதவுகளே இல்லை என்றால் நம்பமுடிகிறதா?. ஆம், இவர்களின் குலத்தெய்வமான முனியப்பசாமி கோவிலுக்கு தங்கத்தில் கதவு வைக்க முடியாத காரணத்தினால், கதவு இல்லாமல் இருக்கிறது. கோவிலுக்கு கதவு இல்லாததால் தங்களது வீடுகளிலும் கதவு வைக்காமல் உள்ளனர். ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஊரில் இதுவரை திருட்டும் நடைபெற வில்லையாம். புது தகவல்னா ஷேர் பண்ணுங்க
Similar News
News November 2, 2025
ராம்நாடு: இந்த எண்களை SAVE பன்னிக்கோங்க!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 2, 2025
ராம்நாடு: ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

இன்று இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத்துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான 1360 கிலோ கடல் அட்டைகள் நாட்டுப்படக்கில் இருந்தது. இதனை அடுத்து கடல் அட்டையையும், நாட்டுப்படகையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
News November 2, 2025
இடிமின்னல் குறித்து மக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

2025 வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் பொதுமக்கள் எதிர்பாராத இடி மின்னல் போன்றவற்றின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் விழிப்புடன் இருக்கவும் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுரைகள் வழங்கியுள்ளார். இடி மின்னலின் போது மக்கள் வெளியே செல்வதற்கு முன் வானிலை எச்சரிக்கைகளை கவனமுடன் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், மேலும் பல அறிவுரைகள் அறிவித்துள்ளார்.


