News March 24, 2025
வேலூர் கோட்டையில் உள்ள நவசக்தி சத்யஜோதி

வேலூர் கோட்டைக்குள் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சிற்பக்கலையின் அற்புதமாக திகழ்கிறது. இக்கோவில், 7 படிநிலைகளைக் கொண்ட பிரம்மாண்ட ராஜ கோபுரத்துடன் பக்தர்களை ஈர்க்கிறது. கோவியிலில் போர்க்காட்சிகள், வேட்டைக் காட்சிகள், போன்ற பல கதைகளை உயிர்ப்பிக்கும் விதமாக உள்ளது. ஆமை வடிவ மண்டபம், அழகிய தூண்கள், நந்தி சிலை, 1981 முதல் அணையாமல் எரியும் நவசக்தி சத்யஜோதி விளக்கு, கோவிலின் சிறப்பம்சங்கள் ஆகும்.
Similar News
News December 28, 2025
வேலூர்: ஒரே நாளில் குவிந்த 6186 மனுக்கள்!

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பாக 6,186 பேர் விண்ணப்பித்தனர். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
News December 28, 2025
வேலூர்: ஆன்லைனில் ரூ.6.5 லட்சத்தை இழந்த வாலிபர்!

வேலூர்: சத்துவாச்சாரியைச் சேர்ந்த 22 வயது வாலிபர், தனக்கு வந்த குறுந்தகவலை நம்பி, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.6,50,000 பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவர் அந்த பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அதை எடுக்க முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர், வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
வேலூர்: திருநங்கையின் கழுத்தை அறுத்த நண்பர்!

வேலூர்: அப்துல்லாபுரத்தில் திருநங்கை ரசிகா மற்றும் வினோத்குமார் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், நேற்று ரசிகாவுக்கு “சர்ப்ரைஸ்” தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும், போலீசுக்கு பயந்த அவர், கிணற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


