News March 24, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

image

வரும் மார்ச் 28- ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ. ஆ. ப. தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 14, 2026

சேலம் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினமான ஜனவரி 16, குடியரசு தினமான ஜனவரி 26 மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த தினமான பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 14, 2026

சேலம்: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்!

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

News January 14, 2026

சேலமே அதிரப்போகுது! நீங்க ரெடியா?

image

சேலம் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜன.15, 16 ஆகிய தேதிகளில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் “சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நடைபெற உள்ளது. மாலை 5.30 மணி முதல் கரகாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. இந்த விழாவைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!