News March 24, 2025
திருப்பத்தூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா குகை

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 3, 2026
திருப்பத்தூர் ஆட்சியருக்கு புத்தாண்டு வாழ்த்து

ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், இன்று (ஜன.3) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற இவர், ஆட்சியருக்கு சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் மாவட்ட பிரதிநிதி கிரிவேலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன் ஆகியோர் பங்கேற்றனர்.
News January 3, 2026
திருப்பத்தூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் காவல் துறை சார்பில் தினம்தோறும் ஒரு விழிப்புணர்வு செய்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது. இன்று (ஜன.3) உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யானவைகளாகும். பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. இத்தகைய குற்றங்கள் குறித்து Cyber Crime Help Line: 1930 அல்லது Website:www.cybercrime.gov.inல் மூலம் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்.
News January 3, 2026
திருப்பத்தூர்: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

திருப்பத்தூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <


