News March 24, 2025
முதலில் வந்தது ஆணா? பெண்ணா? MP சர்ச்சை கருத்து

வழக்கமாக ஒரு விஷயத்தில் முதல் முயற்சி தவறாகவே முடியும் என்பதால், கடவுள் முதலில் ஆண்களை தான் படைத்திருப்பார் என சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு அவர் இப்பதிலை கூறியுள்ளார். மேலும் 2வது முறை, கடவுள் பெண்களைப் படைத்து, அவர்களுக்குத் தேவையான திறனை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?
Similar News
News October 19, 2025
இந்தியில் வாழ்த்து சொன்ன சேகர்பாபு

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 800 வடஇந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு பரிசு பொருள்களை வழங்கி அமைச்சர் சேகர்பாபு இந்தி மொழியில் வாழ்த்து தெரிவித்தார். இதன்பின் அவர் பேசுகையில், வடஇந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
News October 19, 2025
துருவ் விக்ரமின் அடுத்த படம் இதுவா?

’பைசன்’ படத்துக்கு பிறகு துருவ் விக்ரமை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவருடைய அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது. இந்நிலையில், துருவ்வின் அடுத்த படத்தை ’டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவார் என கூறப்படுகிறது. தற்போது, அவர் ரவி மோகனை வைத்து ’கராத்தே பாபு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ரிலீஸ் ஆனதும் துருவ் உடனான படத்தை தொடங்கலாம் என கூறப்படுகிறது.
News October 19, 2025
உங்களுக்கு இப்படி ஒரு பயம் இருக்கா?

பொதுவாக வெளியில் தைரியமான நபராக காட்டி கொள்ளும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். அதுவே அதீத அச்ச உணர்வாக இருப்பதை ஆங்கிலத்தில் போபியா என்று கூறுகின்றனர். இந்த தொகுப்பில் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத போபியாக்களை பற்றி குறிப்பிட்டுள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு எதை கண்டால் பயம் என்று கமெண்ட் பண்ணுங்க. SHARE.