News March 24, 2025

கேலோ இந்தியா போட்டியில் அசத்திய தூத்துக்குடி தங்கங்கள்!

image

டெல்லியில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சோலை ராஜ் நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், முத்து மீனா T-20 பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.

Similar News

News January 12, 2026

தூத்துக்குடி: கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட உடல்?

image

விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலாபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள்(70). ஜன.3 அன்று காணாமல் போன இவர் அங்குள்ள காட்டுப் பகுதி ஊரணி கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு உடலை கல்லால் சேர்த்து கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் காடல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

தூத்துக்குடி: பிளேடால் கழுத்தை அறுத்த கைதி

image

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நகை அடகுக்கடை வாசலில் வைத்து 2023-இல் வக்கீல் முத்துக்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ஆறுமுகநேரியை சேர்ந்த இலங்கேஸ்வரன்(29), அம்பையை சேர்ந்த ராஜரத்தினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் பாளை சிறையில் உள்ள ராஜரத்தினம் பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News January 11, 2026

தூத்துக்குடி: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!