News March 24, 2025
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், புதிதாக தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி கொடுக்க மாட்டோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைப் பற்றி மக்களுக்கு விளக்குவதை பாஜக புரட்சியாக செய்து வருவதாகக் கூறிய அவர், TNல் பாஜக ஆட்சிக்கு வந்ததும், சம கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். அத்துடன், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, PM ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
Similar News
News March 29, 2025
யுகாதி திருநாளுக்கு இபிஎஸ் வாழ்த்து

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் நீங்கள் ஒருமித்து வாழ்ந்து வருவது தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டில் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
News March 29, 2025
3 பேர் உயிரிழப்பு: ஆட்டோ – லாரி மோதி கோர விபத்து

மதுரை திருமங்கலம் அருகே ஆட்டோவும் லாரியும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.தொட்டியபட்டி பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீஸ், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
News March 29, 2025
நீட் தேர்வு மாணவர் கொல்லி: அன்புமணி

நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட 2வது மாணவி தர்ஷினி என x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.