News March 24, 2025
இன்றே கடைசி நாள்: ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு விவரத்தினை மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரிக்கு இன்று மார்ச் 24- க்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2025
தீராத நோயை தீர்க்கும் கஞ்சமலை சித்தேஸ்வரர்..!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கஞ்சமலை சித்தர்கோவில் இக்கோவிலுக்கு அமாவாசையன்று பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். அமாவாசை கோவில் என்ற பெயர் கூட உண்டு. தீராத நோய்யுள்ளவர்கள் சித்தேஸ்வரரை வணங்கி, கோவிலில் உள்ள தீர்த்ததை தலையில் தெளித்தால் நலம் பெறலாம் என்பது நம்பிக்கை.
News March 29, 2025
சேலம் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மாவட்டத்தில் மார்ச் 29 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை ஒன்பதரை மணி ஓமலூர் பேருந்து நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீர் மோர் பந்தல் திறப்பு▶️ காலை 10 மணி தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்குகள் கூட்டமைப்பின் மாநில உரிமை மீட்பு மாநாடு (மூன்று ரோடு) ▶️காலை 11 மணி ஊராட்சி ஒன்றியங்களில் மத்திய பாஜக அரசு கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
News March 29, 2025
அதிமுக நிர்வாகியை வெட்டிய வியாபாரி கைது

ஆத்தூர் நரசிங்கபுரம் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (52). இவர் அதிமுக முன்னாள் நரசிங்கபுரம் நகராட்சி தலைவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி கணேசனுக்கும் தகராறு ஏற்பட்டு, நேற்று முன்தினம் கணேசன், ஸ்ரீராமை கத்தியால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராமை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இந்தநிலையில் நேற்று கணேசனை போலீசார் கைது செய்தனர்.