News March 24, 2025

இஸ்லாமியர்களை சித்தப்பா என அழைப்பேன் – ராஜேந்திர பாலாஜி

image

ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.

Similar News

News October 17, 2025

விருதுநகர்: அரசு திட்டங்கள் கிடைக்கலையா? இத பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரலையா? கவலை வேண்டாம். தமிழக அரசு ‘நீங்கள் நலமா?’ என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <>இங்கு கிளிக்<<>> செய்து குறைகளை பதிவு செய்யலாம். இத்தளத்தில், முதல்வர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதல்வரின் நேரடி பார்வையில் குறைகள் உடனடியாக சரி செய்யப்படும். SHARE

News October 17, 2025

சிவகாசி: பட்டாசுகள் பறிமுதல்

image

சிவகாசி பகுதியில் பாரைபட்டி கிராமத்தில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மிஷின் திரி தயாரிக்கப்பட்டதும், ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டதும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிவகாசி போலீசார், சஞ்சீவ்பாபு, செல்வகுமார் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டுகள் சிறை

image

ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (19). இவர் 15 வயது மாணவியிடம் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி பழகி வந்தார். சிறுமிக்கு தாலி கட்டிய சதீஷ்குமார் கடந்த 2022-ம் ஆண்டு சென்னைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சதீஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!