News March 24, 2025
அலப்பற கிளப்புறோம்!! தோனிக்காக எழுதிய பாடல்

ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற அலப்பற கிளப்புறோம் பாடல் ரஜினிக்கு அப்படியே பொருந்திப்போகும். ஆனால் அது ரஜினிக்கு மட்டும் எழுதிய பாடல் இல்லையாம், தல தோனிக்கும் சேர்த்துதான் எழுதப்பட்டதாம். அனிருத் அளித்த பேட்டியில் அலப்பற கிளப்புறோம் பாடல் ரஜினிக்கு மட்டுமல்லாமல், தோனி ஸ்டேடியத்தில் நுழையும் போது போடக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என எழுதப்பட்டதாகவும் கூறினார்.
Similar News
News March 30, 2025
பெஸ்ட்டான தர்பூசணி வாங்க இதை ஃபாலோ பண்ணுங்க

தோலில் வெள்ளை நிற புள்ளிகள் இருக்கும் தர்பூசணியின் உட்பகுதி சுவையாகவும், நல்ல இனிப்பாகவும் இருக்கும். முட்டை வடிவத்தில் உள்ள தர்பூசணி நன்கு பழுத்திருக்கும். எடை முக்கிய காரணி என்பதால், சுமார் 2 கிலோ எடை கொண்ட தர்பூசணி சிறப்பானதாக இருக்கும். முழுவதும் உறுதியாக இருக்கும் பழத்தையே வாங்குங்கள். சில பகுதி மென்மையாக இருந்தால் அது கெட்டுப்போனதாக அர்த்தம். அதேபோல், தோல் வறண்டதாக இருக்க வேண்டும்.
News March 30, 2025
தோனியை எதிர்த்து பேச தைரியம் இல்லையா?

தோனியை மிடில் ஆர்டரில் இறங்க சொல்ல CSK பயிற்சியாளருக்கு தைரியம் இல்லை என முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி சாடியுள்ளார். உங்கள் அணி வெற்றி பெறத்தானே விளையாடுகிறீர்கள் எனவும், தோனி முடிவு செய்தால் அவ்வளவுதானா, அதை எதிர்த்து கேட்க முடியாதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். RCBக்கு எதிரான போட்டியில், தோனி 9ஆவது ஆளாக பேட்டிங் இறங்கியது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
News March 30, 2025
ஹீரோ + டைரக்டராகும் VJ சித்து!

VJ சித்து ஒரு படத்தை இயக்கி, அதில் அவரே நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான புரோமோ ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.