News March 24, 2025
இதை செய்தால் 60% மின்சாரத்தை சேமிக்கலாம்!

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், வீடுகளில் AC பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், மின்சாரப் பயன்பாடும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், 5 Star தரம் வாய்ந்த ACகளைப் பயன்படுத்தினால் 60% வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ACக்களை பயன்படுத்தினால், 40-50% அதிக மின்சாரம் செலவாகும் எனவும், 24°Cல் ACயை பயன்படுத்துவதே சிறந்தது என்கின்றனர்.
Similar News
News January 18, 2026
திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை: ரகுபதி

திமுக கூட்டணி உடையும் என்ற சிலரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் கிடையாது என்றவர், காங்கிரஸ் தங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது எனவும் அனைவரையும் அரவணைப்பதே CM ஸ்டாலினின் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News January 18, 2026
ரசிகர்களை நிச்சயம் பெருமைப் படுத்துவேன்: அஜித்

துபாய் ரேஸில் கார் விபத்தில் சிக்கியதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களிடம் நடிகர் அஜித் Sorry கேட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்களுக்கு, தான் ரேஸ் ஓட்டுவதையும், எங்களது அணி வெல்வதை பார்க்க முடியாததும் வருத்தம் அளிப்பதாக அஜித் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் ரசிகர்களை பெருமைப்படுத்தும் என அஜித் சத்தியம் செய்துள்ளார்.
News January 18, 2026
மகளிருக்கு ₹2,500.. புதுச்சேரி CM தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ₹1,000 உதவித்தொகையை சமீபத்தில் ₹2,500 ஆக உயர்த்தி அரசு அறிவித்தது. இந்நிலையில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தொகை விரிவாக்க திட்டத்தை CM ரங்கசாமி ஜன.22-ல் தொடங்கி வைக்கிறார். நேற்று, அனைத்து மகளிருக்கும் ₹2,000 வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


