News March 24, 2025
அடையாளம் காணப்பட்ட இடங்களில் அகழாய்வு: வலியுறுத்தல்

செய்துங்கநல்லூர் அருகே உள்ள சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் உள்ள அடையாளம் காணப்பட்ட இடங்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அகழாய்வு செய்ய வேண்டும். இந்திய பன்முகத்தன்மை கொண்ட உண்மையான வரலாற்றை அறிய அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டியது காலத்தில் கட்டாயம் என, நெல்லையில் நடைபெற்ற பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு சார்பிலான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Similar News
News April 17, 2025
டேக்வாண்டோ பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் SDAT- ஸ்டார் அகாடமி டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டரங்க அலுவலக முகவரியில் 21.04.2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 17, 2025
நிலத்தகராறு கொலையில் ஆயுள் தண்டனை

கயத்தாறு அருகே உள்ள இலந்தை குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரை கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த காளி பாண்டியன் என்பவர் நிலத்தகராறு காரணமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்.16) காளி பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
News April 16, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.