News March 24, 2025

ஈரோட்டில் வரி செலுத்திய மக்கள்

image

ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச்.31 வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இன்று (24) காலை சம்பத் நகர் மாநகராட்சி கிளை அலுவலகத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று வரிகளை செலுத்தி சென்றனர்.

Similar News

News October 14, 2025

ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள்

image

* தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது,
* இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்,
* வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்.
* சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்க.

News October 14, 2025

ஈரோடு: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News October 14, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக் 15) நாளை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார். உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் பங்கேற்று பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

error: Content is protected !!