News March 24, 2025

Netflix வெப் சீரியஸ் மோசடி.. இயக்குநர் கைது

image

Netflix-யிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்த ஹாலிவுட் இயக்குநர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஒயிட் ஹார்ஸ்’ என்ற வெப் சீரிஸை இயக்குவதற்காக Netflix கொடுத்த 22 மில்லியன் டாலர் பணத்தில், ஒரு எபிசோட் கூட எடுக்காமல், சொகுசான கார்கள், ஆடம்பரமான வீடுகளை வாங்கி செலவழித்துள்ளார். இதுதொடர்பான, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News December 29, 2025

ரஷ்யா, உக்ரைன் போர்.. டிரம்ப் முக்கிய தகவல்

image

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையால் போர் முடிவுக்கு வரலாம் அல்லது நீண்ட காலம் எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், போரினால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடுவதை யாரும் விரும்பவில்லை எனவும் அவர் பேசியுள்ளார். இந்த போரை நிறுத்துவது மிகவும் சிரமமானது என டிரம்ப் குறிப்பிட்டார்.

News December 29, 2025

ஓஷோவின் பொன்மொழிகள்!

image

*உன்னை நேசித்தால் நீ பிறரை நேசிப்பாய், உன்னை வெறுத்தால் நீ பிறரையும் வெறுப்பாய் *எங்கேயும், எப்போதும், எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் ஆனந்தமாய் இருந்திடுங்கள் *பேசும்போது பயப்படாதீர்கள்! பயப்படும்போது பேசாதீர்கள்! *வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை. வேலையை விரும்பிச் செய்பவன் அரசன் *இறைவன் வேண்டுவதைத் தருபவர் அல்ல, வாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர் *நட்சத்திரங்களை காண இருள் தேவைப்படுகிறது

News December 29, 2025

தமிழகத்தை கடனாளி ஆக்கிய திமுக: EPS

image

கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது என EPS கூறியுள்ளார். கொரோனா பேரிடரால் அதிமுக ஆட்சியில் அரசுக்கு வருமானம் இல்லாத போதிலும் விலைவாசி உயரவில்லை. தற்போது GST, பத்திரப்பதிவு, கலால் வரி உயர்ந்து வருமானம் அதிகரித்தும் திமுக அரசு கடன் வாங்குவதாக EPS சாடியுள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழக மக்களை கடனாளி ஆக்கியது தான் CM ஸ்டாலினின் சாதனை என அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!