News March 24, 2025
சென்னை பேருந்துகளில் இலவச பயணம்

18வது சீசனின் ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது. இதில் சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை காண்பித்து, போட்டிக்கு 3 மணி நேரம் முன்பும், போட்டி முடிந்த 3 மணி நேரம் வரையும் இலவசமாக பயணிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News March 29, 2025
ஹீட்டர் போடும்போது கவனம்: உயிரே போய்விடும்

மணிமங்கலத்தில், ஹீட்டர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்த சிறுவன் (12) உயிரிழந்தான். நீங்கள் ஹீட்டர் போடும்போது, ஈரக்கையால் சுவிட்சை தொட கூடாது. ஹீட்டர் சூடாகி கொண்டிருக்கும்போது, சுவிட்சை ஆஃப் செய்யாமல் தொட்டு பார்க்க கூடாது. முடிந்த அளவுக்கு தொட்டு பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் சுட வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஹீட்டர் அருகில் குழந்தைகளை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News March 29, 2025
நந்தனம் கல்லுரியில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இன்று (மார்.29) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணிவரை நடைபெறும். இந்த முகாமில் சுமார் 20,000 இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த <
News March 29, 2025
காற்று மாசுபாடு: ரூ.5 லட்சம் வரை அபராதம்

சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டை தணிக்கும் நடவடிக்கைகளை பணியாளர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய சிசிடிவி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அதை சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.