News April 1, 2024
விரைவில் இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

மீனவர்கள் கைது தொடர்பாக கடந்த 2022க்குப் பின் இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே 6 மாதத்திற்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது, இலங்கை உள்நாட்டு பிரச்னையால் மார்ச் 2022க்குப் பின் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News November 9, 2025
இளவரசர் போல இருந்ததில்லை: செங்கோட்டையன்

உழைப்பவர்களை யாராலும் வீழ்த்தமுடியாது என்று செங்கோட்டையன் பேசியுள்ளார். இளவரசர் போன்ற வாழ்கையை என்றும் வாழ்ந்ததில்லை என்ற அவர், எளிமையாக வாழ்ந்ததால் தான் ’நம்ம வீட்டு பிள்ளை’ என எண்ணி மக்கள் தனக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்ததாக கூறியுள்ளார். மேலும், தனது தியாகங்கள், போராட்டங்கள் குறித்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு தனக்கு பல கடிதங்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
இபிஎஸ் வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம் உருவானது!

சென்னையில் உள்ள EPS இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். காலையில் தான், நடிகர் அருள்நிதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரபரப்பை கிளப்பியது. அண்மைக்காலமாக TN-ல் முக்கிய இடங்களை குறிவைத்து அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் போலீசாரை தலைசுற்ற வைக்கிறது.
News November 9, 2025
உலகளவில் சாதனை படைத்தார் விஜய்

ஜனநாயகனின் தளபதி கச்சேரி பாடல் வெளியான 18 மணி நேரத்தில் 86 லட்சத்துக்கும் மேல் பார்வைகளை கடந்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும். மறுபக்கம் விஜய் உலகளவில் ஒரு சாதனையை படைத்திருக்கிறார். அதாவது கடந்த 24 மணி நேரத்தில் கூகுளில் விஜய் & ஜனநாயகன் தான் அதிகம் தேடப்பட்டிருக்கிறதாம். மில்லியன் வியூஸ், X டிரெண்டிங் ஆகியவற்றை தாண்டி கூகுளில் இப்படியொரு சாதனை படைப்பது பெரிது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


