News March 24, 2025
கடலூர் மாவட்டத்தில் அபூர்வ காட்சி தரும் நான்கு தெய்வங்கள்

கடலூர் மாவட்டத்தில் 4 கோவில்களில் அபூர்வ கோலத்துடன் காட்சி தரும் 4 தெய்வங்கள் : மேலக்கடம்பூர் சிவாலயத்தில் சனி பகவான் கருட வாகனத்துடன் காட்சி தருகிறார். திருவதிகையில் நரசிம்மர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். சிவபுரியில் நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன் காட்சி தருகிறார். வேலுடையான்பட்டில் முருகன் வில்லும் அம்பும் ஏந்தி காட்சி தருகிறார்.
Similar News
News September 24, 2025
கடலூர்: அரசு சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்!

கடலூர் மாவட்டத்தில் இன்று (செப்.24) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஜி.என் மஹால்; சாத்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம்; பரங்கிப்பேட்டை ராமகிருஷ்ணா திருமண மண்டபம்; முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் ரமேஷ் மண்டபம்; கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி; கோண்டூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
News September 24, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.23) இரவு 10 மணி முதல் இன்று (செப்.24) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
பழைய பொருட்கள் விற்பனை; ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் தூய்மை மிஷன் 2.0 இயக்கத்தின் மூலம் பயனற்ற பழைய பொருட்களை சேகரித்தனர். பின் அதனை தரம்பிரித்து மறுசுழற்சிக்காக விற்பனை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (செப்.23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.