News March 24, 2025
கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹூக்ளி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (எச்.சி.எஸ்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், புராஜக்ட் ஆபிசர் உள்ளிட்ட 24 இடங்கள் உள்ளன. 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார்ச். 24) <
Similar News
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த லிங்கை <
News April 4, 2025
சீர்வரிசை தட்டுடன் தாசில்தாரிடம் மனு

உளுந்துார்பேட்டையில், உடையானந்தல், டி.ஒரத்தூர், பா. கிள்ளனுர் கிராமங்களில் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை, கணினி சிட்டாவாக பதிவேற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்திய கம்யூ., வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தாசில்தாரிடம் சீர்வரிசை தட்டுடன், இந்திய கம்யூ., நிர்வாகிகள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
News April 4, 2025
கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி பலி

கள்ளக்குறிச்சி, நேற்று காலை திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழனூரில் பலத்த மழை பெய்தது. காலை 8:00 மணியளவில் ராதா என்பவரின் வீட்டு தோட்டத்தில் மின்னல் தாக்கியதில்அங்கிருந்த பசுமாடு மற்றும் அதன் கன்று குட்டியும் சுருண்டு விழுந்து இறந்தது. மின்னல் தாக்கி பசு மாடு, கன்று பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.