News March 24, 2025

புளியங்குடி: மூளைச்சாவு அடைந்தரின் உறுப்புகள் தானம்

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த அருணாச்சலம்(58) என்பவர் வீட்டின் தகர கூரையில் கால் வைத்தபோது கீழே விழுந்து, தலையில் அடிபட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்ற மூளைச்சாவு அடைந்ததால் உறவினர்கள் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் நேற்று(மாரச் 23) இரவு தானம் பெறப்பட்டன. இன்று அரசு சார்பில் இறுதி மரியாதை செய்து அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.

Similar News

News September 24, 2025

தென்காசியில் இறைச்சி விற்பனைக்கு தடை

image

தென்காசி நகராட்சி பகுதிகளில் வருகிற அக்.2, காந்தி ஜெயந்தியையொட்டி இறைச்சி விற்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசாணையின் படி கால்நடைகளை வதை செய்தல், அனைத்து விதமான இறைச்சி மற்றும் மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறைச்சி கடை திறந்து வைக்க கூடாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 24, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (23-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100ஐ தொடர்பு கொள்ளலாம்.

News September 23, 2025

அரசியல் கட்சி ஆவணங்களுடன் சமர்ப்பிக்க ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மக்களாட்சி கட்சி பதிவு செய்யப்பட்ட முகவரி 57 ஜக ஜீவன் ராம் தெரு பரும்பு ஆழ்வார்குறிச்சி என்று இருக்கும் நிலையில் மக்களாட்சி கட்சியின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அக்டோபர் ஒன்பதாம் தேதி உரிய ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அலுவலர் முன் ஆஜராக வேண்டும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

error: Content is protected !!