News March 24, 2025
விழுப்புரம் அருகே மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

விழுப்புரம் கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி (42). விவசாயியான இவர், 4 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இறந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
Similar News
News November 9, 2025
விழுப்புரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம் மற்றும் சர்வீஸ் பவுண்டேஷன் இணைந்து 90வது இலவச கண்சிகிச்சை முகாமை நடத்துகிறது. இந்த முகாம் நாளை (09.11.2025) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேசிய நெடுஞ்சாலை, கோயிலூரில் நடைபெறும். விழுப்புரம் மாவட்ட மக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமில் கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.
News November 8, 2025
FLASH: கோவையை தொடர்ந்து விழுப்புரத்தில் கொடூரம்

திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு தெரியாமல் ஆண் நண்பருடன் சென்னைக்கு சென்ற மாணவி, கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பி உள்ளார். அப்போது காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறி பாழடைந்த வீட்டிற்கு சென்று அத்துமீறி உள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் ஷேர் பண்ணுங்க
News November 8, 2025
ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (நவ.8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வன்னியர்களுக்கு இடைக்கால தீர்வாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த கோரி அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். வருகின்ற (டிச) 12-12-2025 அன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் எதிரே அற வழியில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிதுள்ளார்.


