News March 24, 2025

திண்டுக்கல்லில் ரூ.60 ஆயிரம் சம்பளம்… இன்றே கடைசி நாள்

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பாக பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Nurse, Medical Officer, Health Inspector என மொத்தமாக 4 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். <>விண்ணப்ப படிவத்திற்கு இதை கிளிக் செய்யவும். <<>>

Similar News

News September 24, 2025

திண்டுக்கல்: பாஜக சமூக ஊடகப்பிரிவு தலைவர் நியமனம்!

image

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துராமலிங்கம் பரிந்துரையின் பேரில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாவட்டத் தலைவராக ஜோதிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

அதிகாரிபட்டி: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!

image

சிலுவத்தூர்-வங்கமனத்தூர், அதிகாரிபட்டியில் நடந்து செல்வதற்கு பாதை வசதி கோரி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள் இந்த போராட்டத்தில் இறங்கினர். தகவலறிந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News September 23, 2025

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை முகாம் நாளை துவக்கம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கு அரசு வழங்கும் ரூ.1,000 பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆய்வு முகாம் செப். 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்கள் நாளை (செப். 24) காலை 10 மணி முதல் 12 மணி வரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள 200-வது வார்டில் நடைபெறும் முகாமில் நேரில் பங்கேற்கலாம். இந்த முகாமில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

error: Content is protected !!