News March 24, 2025
வனப்பகுதியில் உருவாகி வரும் இன்னொரு ‘வீரப்பன்’

தமிழ்நாடு – கர்நாடகா வனத்துறைக்கு போக்கு காட்டிவரும் செந்தில் என்பவரை இன்னொரு ‘வீரப்பன்’ என கூறுகின்றனர். வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராமத்தில் வசித்து வந்த செந்தில், யானைகளை வேட்டையாடி தந்தங்களைக் கடத்தியுள்ளான். அதிகாரிகள் பலருக்கும் மான் கறியை விருந்து படைத்ததும் தெரியவந்துள்ளது. அண்மையில் கர்நாடக வனத்துறையினரிடம் சிக்கிய செந்தில், தப்பியோடிய நிலையில் அவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News March 30, 2025
ஒற்றுமையின் உணர்வை தூண்டட்டும்: CM வாழ்த்து

உகாதி திருநாளை கொண்டாடும் தெலுங்கு, கன்னட பேசும் திராவிட சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மொழி மற்றும் எல்லை நிர்ணயம் போன்ற பிரச்னையை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதே நமது பலம் எனவும் X பதிவில் அவர் கூறியுள்ளார். உகாதி பண்டிகை நமக்குள் ஒற்றுமையின் உணர்வைத் தூண்டட்டும் எனவும் முதல்வர் பதிவிட்டுள்ளார்.
News March 30, 2025
கே.ஏ.செங்கோட்டையனுக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு?

கே.ஏ.செங்கோட்டையனுக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக இபிஎஸ் இடமிருந்து விலகி இருக்கும் அவர், ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசிய அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News March 30, 2025
ஒரே மாதத்தில் ₹3,360 உயர்ந்த தங்கம்

சென்னையில் தங்கம் விலை இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,360 உயர்ந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் ₹7,940க்கும், சவரன் ₹63,520க்கும் விற்பனையானது. பின்னர், கிடுகிடுவென அதிகரித்து 30 நாள்களில் ஒரு கிராமுக்கு ₹420 உயர்ந்துள்ளது. இதனால், 8 கிராம் அடங்கிய ஒரு சவரன் இன்று ₹66,880க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ஒரு சவரன் ₹50,200க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.