News March 24, 2025

களம்பூர் அருகே விவசாயி உடல் மீட்பு 

image

களம்பூரை அடுத்த ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி இவரது மனைவி கல்பனா, கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பதகராறு காரணமாக மனைவி தனது தாய் வீடான வேலூருக்கு சென்று விட்டார். இதனால் சிவக்குமார் மட்டும் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று  சிவகுமார்  ரத்தகாயங்களோடு உயிரிழந்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த களம்பூர் போலிசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 8th,10th,12th, ITI, பாலிடெக்னிக் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 04175-233381 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

“திருவண்ணாமலையில் கூட்டுறவு தேர்வுக்கு இலவச பயிற்சி”

image

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கூட்டுறவு தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு டிப்ளமோ/பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலையில் 109 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் நாளை (ஆகஸ்ட் 23) க்குள் Google Form https://forms.gle/PpAovGywpLNUy4JG9 மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!