News March 24, 2025
தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் 1 மணி நேரத்திற்கு பிறகு எச்சரித்து அனுப்பியுள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் படகுடன் மீனவர்கள் நிம்மதியுடன் கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படை மனம் மாறிவிட்டதா..!
Similar News
News March 29, 2025
உலக சந்தையில் தமிழர்களின் பொருட்கள்: அமைச்சர்

கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களை மின் வணிகம் மூலம் உலகச் சந்தைக்கு எடுத்து செல்ல,
₹2 கோடி மதிப்பில் ‘கைவினைப் பொருட்கள் சந்தை இயக்கம்’ செயல்படுத்தப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்த, இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ₹1.30 கோடி மதிப்பில், 10 விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 29, 2025
ஸ்டாலின் vs விஜய்: மக்கள் யார் பக்கம்?

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலினையே 27% மக்கள் விரும்புவது CVoter நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக விஜய்க்கு 18% மக்கள் முதலமைச்சராக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10% பேரும், அண்ணாமலைக்கு 9% பேரும் ஆதரவாக உள்ளனர். இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத விஜய் 2ஆம் இடம் பிடித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
News March 29, 2025
மக்களிடம் கொள்ளை போன ₹22,000 கோடி மீட்பு: பிரதமர்

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ₹22,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரவும், பகலும் விமர்சிக்கப்படும் ED-யால் இப்பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அப்பணத்தை திருடப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் கொள்ளை அடித்தவர்கள், அதை மக்களிடமே திருப்பி கொடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.