News March 24, 2025
CUET-UG விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

CUET – UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 2 நாள்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று இரவு 11.50 வரை <
Similar News
News March 29, 2025
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!

மியான்மரில் இன்றும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை அடுத்தடுத்து (7.7 & 6.4) நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 250 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்களை மீட்கும் காட்சிகள் காண்போரைக் கண்கலங்க வைக்கிறது.
News March 29, 2025
புது காதலருடன் சிட்னியில் ஊர் சுற்றுகிறாரா சமந்தா?

சிட்னியில் சென்றுள்ள சமந்தா ஹாலிடேவை ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகிறார். அங்கே எடுத்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாவிலும் பதிவிட்டார். உடனே, இந்த போட்டோஸை எடுத்தது யார் என்ற கேள்வி நெட்டிசன்களை தொற்றியது. ஏற்கனவே அவர் பாலிவுட் இயக்குநரை டேட் செய்வதாக தகவல் வெளியானது. ‘ஒருவேள அவரா இருக்குமோ’ என கேள்வி கேட்டனர். ஆனால், சமந்தா, ‘போட்டோ எடுத்தது சிட்னி டூர் guide’ என பதிலளித்து பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.
News March 29, 2025
மீளாத துயரில் ஆழ்ந்த மியான்மர்.. 1000 பேர் மாயம்

மியான்மரில் நேற்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த பூகம்பம் அந்நாட்டு மக்களை உலுக்கியது. சீட்டு கட்டுகளைப் போல் சரிந்த கட்டடங்களில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகர் நய்பிடாவ், மாண்டலே, டாங்கூ நகரங்களில் எங்குப் பார்த்தாலும் கட்டடக் குவியலாகக் காட்சியளிக்கிறது. இதுவரை 250 பேர் பலியான நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.