News March 24, 2025

17 வயது சிறுவனை 30 முறை வன்கொடுமை செய்த பெண்!

image

ஜெயிலில் 17 வயது சிறுவனை, 47 வயது பெண் டாக்டர் ஒருவர் 30 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. USAவின் ஸ்டேடன் தீவில் உள்ள சிறையில் ‘தெரபி’ என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர் புகார் அளிக்க, அந்த டாக்டர் மாயா ஹேய்ஸ் கைதாகி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை போலும்..

Similar News

News March 29, 2025

GT vs MI.. முதல் வெற்றி யாருக்கு?

image

முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டி நடைபெறும் அகமதாபாத் கிரவுண்ட், பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், ரன்மழையை எதிர்பார்க்கலாம். இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியதில், 3-ல் குஜராத்தும், 2-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன. எந்த அணி வெல்லும் என நீங்க நினைக்கிறீங்க?

News March 29, 2025

மகளிர் உரிமைத் தொகை: தகுதிகளை தளர்த்த கோரிக்கை

image

மகளிர் உரிமைத் தொகை திட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேரவையில் பேசிய எம்.எல்.ஏ ஜெயக்குமார், மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்கு விதிக்​கப்​பட்​டுள்ள விதி​கள் கடுமை​யாக உள்​ளதால் ஏராள​மான பெண்​கள் இதனைப் பெற முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதனால் கெடு​பிடிகளைத் தளர்த்த வேண்​டும் எனக் கூறியுள்ளார். அதிமுகவின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?

News March 29, 2025

CSKவை கிண்டலடித்தவர் மீது கொடூரமாக தாக்குதல்!

image

CSK அணியை கிண்டல் செய்த சென்னையை சேர்ந்த ஜீவரத்தினம் என்பவரை, மது போதையில் இருந்த 7 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர், சென்னை ராயப்பேட்டை ஹாஸ்பிடலில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், தாக்கியவர்கள் அனைவருமே ஜீவரத்தினத்தின் நண்பர்கள்தானாம்.

error: Content is protected !!