News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

Similar News

News January 1, 2026

மதுரை மக்களே உங்களுக்கு உதவும் முக்கிய எண்கள்

image

மதுரை மாவட்ட வட்டாட்சியா் அலுவலக எண்கள்
1.வடக்கு – 0452-2532858
2.மேற்கு – 0452-2605300
3.திருப்பரங்குன்றம் – 0452-2482311
4.வாடிப்பட்டி – 04543-254241
5.தெற்கு – 0452-2531645
6.கிழக்கு – 0452-2422025
7.மேலூா் – 0452-2415222
8.கள்ளிக்குடி – 04549-278889
9.உசிலம்பட்டி – 04552-252189
10.திருமங்கலம் – 04549-280759
11.பேரையூா் – 04549-275677

News January 1, 2026

மதுரை: உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் போது நேர்ந்த சோகம்.!

image

தேனி பெரியகுளத்தை சேர்ந்­த­வர் போத்­தம்­மாள்(60). கப்­ப­லூரில் உள்ள உறவினரை பார்ப்­ப­தற்­காக வந்­தவர், பின் ஊருக்­கு செல்­வ­தற்­காக உறவி­னரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். திருமங்­க­லம் மறவன்குளம் அருகே பின்னால் வந்த டூவீலர் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்­து தலை­யில் பலத்த காயம் ஏற்­பட்டு சம்­பவ இடத்தி­லேயே அவர் உயிரிழந்­தார். திருமங்­க­லம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News January 1, 2026

மதுரை : ஆட்டோ டிரைவர் வெட்டி கொடூர கொலை

image

மதுரை அருகே விருசமரத்து ஊரணி பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முனீஸ்(26) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்றிரவு மதுரை விமான நிலைய சாலையில் தனது சகோதரியுடன் பேசி கொண்டிருந்த போது பெருங்குடியை சேர்ந்த 4 பேர் முனீஸிடம் வாக்குவாதம் செய்து கத்தி, அரிவாள் கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முன்பகை காரணமாக கொலை நடந்ததா என அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!