News April 1, 2024
நீட் விலக்கு எனும் கண்கட்டி வித்தையை காட்டும் திமுக

நீட் தேர்வு விலக்கு எனும் கண்கட்டி வித்தையை திமுக காண்பித்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘எங்கே பார்த்தாலும் திமுக ஆட்சியில் கஞ்சா, போதைப் பொருட்கள் தலைவிரித்து ஆடுகிறது. எடப்பாடி பழனிசாமி பாமக துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்’ என்றார்.
Similar News
News February 4, 2026
சிக்கன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விலை குறைந்தது

சண்டே வர வெயிட் பண்ண வேண்டாம், இன்னைக்கே சிக்கன் எடுத்துற வேண்டிதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த ஹேப்பி நியூஸ். இன்று கறிக்கோழி விலை 1 கிலோ ₹120-லிருந்து ₹5 குறைந்து ₹115 ஆக விற்பனையாகிறது. அதேநேரம், முட்டைக்கோழி விலை ₹72 ஆகவே நீடித்து வருகிறது. முட்டை கொள்முதல் விலையும் ₹5.25 ஆக உள்ளதால், சிக்கன் பிரியர்கள் இன்று ஹேப்பியாக வாங்கி சாப்பிடுங்கள்.
News February 4, 2026
வானதியிடம் இருந்து MLA தொகுதி பறிக்கப்படுகிறதா?

கோவை தெற்கு தொகுதிக்காக உழைத்திருக்கிறேன் என மக்கள் சொல்வதே பெரிய நிறைவுதான் என வானதி கூறியுள்ளார். தன்னுடைய தொகுதியை(கோவை தெற்கு) அதிமுக பறிப்பதாக <<19010293>>வரும் தகவல்களுக்கு<<>> பதிலளித்த அவர், கடந்தமுறை அதிமுக தனக்கு அத்தொகுதியை விட்டு தந்தது என விளக்கமளித்துள்ளார். மேலும், ஒரு தொகுதிக்குள்ளேயே தன்னை சுருக்கிக்கொள்ள கூடாது எனவும் கூட்டணியில் விட்டுக்கொடுப்பதே கட்சிக்கு நல்லது என்றும் பேசியுள்ளார்.
News February 4, 2026
CM ஸ்டாலின் எனது நண்பர்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் என 2 லட்சம் பேர் வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக ஏமாற்றியுள்ளதாகவும் சாடியுள்ளார். அதேசமயம் CM ஸ்டாலின் தனது நண்பர்தான், ஆனால் நிர்வாகம் சரியில்லை என்பதே தன்னுடைய விமர்சனம் என கூறியுள்ளார்.


