News March 24, 2025

“2026ல் தமிழகத்தை ஆளப்போகிறோம்”

image

வரும் மார்.28ல் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை பாபு சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘ பொதுக்குழுவில் கூட போறோம் – 2026இல் தமிழகத்தை ஆளப்போகிறோம்’ ‘ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டுள்ளன.

Similar News

News September 24, 2025

கோவையில் கனமழைக்கு வாய்ப்பு!

image

வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. செப்.25ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செப்.26, 27 தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 23, 2025

ரயில் கேபிள் திருடிய மூன்று பேர் கைது

image

கோவை மாவட்டம் அவரப்பாளையம் பாலம் அருகே சப்-ரயில்வே செப்பு கேபிள் திருட்டு தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில் இன்று கேபிள் திருட்டில் ஈடுபட்ட ராமச்சந்திரன் (42) சதாசிவம் (46) மற்றும் குமார் (49) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 3,500 மதிப்புள்ள கேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News September 23, 2025

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு ஆதித்யா (20) இவர் இருசக்கர வாகனத்தில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து அவர் மீது மோதியதில் காயமடைந்து விஷ்ணு உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து கிழக்குப் புலனாய்வு காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் குமார் (38) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!