News March 24, 2025
செங்கல்பட்டில் குடிகொண்ட மூதேவி

வல்லம் மலை குகைக் கோயில் என்பது மலைகளில் அமைந்துள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்ட கோயிலாகும். இது ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டியதாகும். இங்கே ஒரு பெரிய மூதேவியின் சிலை உள்ளது. இம்மூதேவியைத்தான் பல்லவ மன்னர்களும் தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடி வந்துள்ளனர். அவர்களைப் பிற்காலத்தில் வென்றுப் பேரரசை நிறுவிய இடைக்காலச் சோழர்களும்கூட இம்மூதேவிக்குச் சிறப்பான வழிபாடுகள் செய்துள்ளனர்.ஷேர்
Similar News
News July 6, 2025
செங்கையில் கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்

பொறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஸ்வரன், தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். இவர் நேற்று (ஜூலை 5) தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். அப்போது பந்து அருகிலுள்ள விவசாய கிணற்றில் விழுந்துள்ளது. இந்த பந்தை எடுக்க முயன்ற ரிஷிகேஷ்வரன், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
News July 6, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உங்கள் மொபைலில் ஆக்ஸிஜன், சர்க்கரை அல்லது ரத்த அழுத்தம் சரிபார்க்கும் அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் இச்செயலிகள் மூலம் கைரேகை நகலைப் பயன்படுத்தி ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளிலிருந்து பண மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. சைபர் கிரைம் உதவிக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
News July 5, 2025
சிறந்த காவல் நிலையமாக அச்சரப்பாக்கம் தேர்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் காவல் நிலையத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சரின் செங்கல்பட்டில் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் அருகிலேயே சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருது, காவல் நிலையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.