News March 24, 2025

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

image

வெள்ளியங்காடு அடுத்துள்ள பில்லூர் அணை மாட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு  மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 23, 2025

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு ஆதித்யா (20) இவர் இருசக்கர வாகனத்தில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து அவர் மீது மோதியதில் காயமடைந்து விஷ்ணு உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து கிழக்குப் புலனாய்வு காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் குமார் (38) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 23, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (23.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

விதிமீறலில் ஈடுபட்ட டிரைவரின் லைசன்ஸ் 7 நாள் தடை!

image

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சத்யஸ்ரீ என்ற தனியார் பேருந்து சில தினங்களுக்கு முன் காரமடையில் நெரிசல் காரணமாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் எதிர் திசையில் பேருந்தை டிரைவர் இயக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் தனியார் பேருந்து டிரைவரின் லைசென்ஸ் மீது ஏழு நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!