News March 24, 2025
Summer Tips: வாழைப்பழம் ஃபேஸ் பேக்

*ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் ஃபேஸ் பேக் இது. *தேவை: மசித்த வாழைப்பழம்- 1/2 கப், தேன்- 1 Tbs.
*செய்முறை: மசித்த வாழைப்பழத்தை எடுத்து, அதில் 1 Tbs தேன் சேர்த்து, அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு உலர விடவும். பின், வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்கினால் சருமத்திற்கு போதிய நீர்ச்சத்து கிடைத்து, சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படும்.
Similar News
News January 18, 2026
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

‘Why human connection matters in a digital world’ என்ற தலைப்பில் 9 – 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை CBSE அறிவித்துள்ளது. இதில் தேசிய அளவில் வெற்றிபெறும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக முறையே ₹50,000, ₹25,000 மற்றும் ₹10,000 வழங்கப்படும். மேலும், பிராந்திய அளவிலும் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி அறிய இங்கே <
News January 18, 2026
இட்லி கல்லு மாறி இருக்கா? அப்போ இப்படி பண்ணுங்க!

நாம் விரும்பி உண்ணும் இட்லி, சில சமயங்களில் மண்டையை உடைக்கும் கல்லாக மாறிவிடுவது உண்டு. இந்நிலையில் மல்லிகை பூ போன்ற இட்லியை பெற, நீங்கள் எடுத்து வைத்துள்ள புளித்த இட்லி மாவில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்துவிடவும். அதன்பின் பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் மாவை ஊறவிடுங்கள். அதன்பின்னர் மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுங்கள். மல்லிகைப் பூ போன்ற இட்லி ரெடி!
News January 18, 2026
திமுகவை பின்பற்றும் EPS? மனோ தங்கராஜ்

மகளிர் உரிமைத் தொகையை ஏமாற்று வித்தை எனக் கூறிய EPS, தற்போது ₹2,000 தருவதாக பேசுகிறார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். இதன் மூலம் மாநில நிதி நிலைமை சரியான நிலையில் இருப்பதை EPS உணர்ந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், 2021 தேர்தலில் அத்திட்டத்தை அரசியலுக்கான அறிவிப்பு என விமர்சித்த EPS, தற்போது திமுகவை பின்பற்றி ₹2,000 தரப்படும் என்று அறிவித்தாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


