News March 24, 2025
சிறிய இலக்கை நிர்ணயிங்கள்…

வெற்றியாளர்கள் என்ன வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு வேண்டாத விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல் இருக்க முடியும். அதேபோன்று உங்கள் இலக்கு அடையும் அளவில் இருக்க வேண்டும். யதார்த்தமில்லாத பெரிய இலக்கை நிர்ணயித்து, அடைய முடியவில்லை என்று வருந்தாமல் சிறிய சிறிய இலக்கை நிர்ணயித்து, வெற்றிபெற்று, முன்னேறுங்கள்!
Similar News
News March 29, 2025
சங்கிகளின் அஜெண்டா.. ‘L2’ஐ புகழும் கேரள காங்.

‘L2: எம்புரான்’ படம் சங்கிகளின் அஜெண்டாவை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக கேரள காங். தெரிவித்துள்ளது. கேரளாவை பிளவுபடுத்துவதற்கும், கடல்வளம், துறைமுகங்களை கைப்பற்றுவதற்கு இதே அஜெண்டா பின்பற்றப்படுவதாகவும் கூறியுள்ளது. ‘L2: எம்புரான்’ படம் குஜராத் கலவரத்தையும், மத்திய அரசு CBI, ED போன்ற எஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாகவும் மறைமுகமாக விமர்சித்துள்ளது.
News March 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் – 29 ▶பங்குனி – 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: அமாவாசை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மகம் ▶நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 8.15
News March 29, 2025
இன்ஸ்டா போன்று வாட்சப்பிலும் வருகிறது புது வசதி!

நமது புகைப்படங்களை சினிமா பாடல்களுடன் ஸ்டோரியில் பதிவிடும் வசதி இன்ஸ்டகிராமில் உள்ளது. தற்போது, அதே வசதி வாட்சப்பிலும் கொண்டுவரப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். பயனர்கள் தங்களுக்குத் தேவையான பாடல்களை தேர்வு செய்து, புகைப்படங்களுடன் ஸ்டேட்டஸில் வைத்துக் கொள்ளலாம். விரைவில் இந்த அப்டேட் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்புறம் என்ன ஸ்டேட்டஸ்ல ட்ரைன் விடுவோமா?