News March 24, 2025
அப்பாடா.. ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டாங்க!

ஒருவழியாக கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? என்பதற்கு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பதில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, முட்டை ஓடு உருவாக OVOCLEIDIN 17 OC 17 என்ற புரதம் தேவை. இந்த புரதம் கோழியின் கருப்பையில் தான் உள்ளது. எனவே முதலில் கோழிதான் தோன்றி இருக்க வேண்டும்; அதன் பிறகே முட்டை வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
Similar News
News March 26, 2025
சென்னையில் ஓராண்டுக்குள் 4ஆவது என்கவுன்டர்!

சென்னை போலீஸ் கமிஷனராக கடந்தாண்டு ஜூலையில் பொறுப்பேற்ற அருண் ஐபிஎஸ், ஓராண்டுக்குள் 4ஆவது என்கவுன்டரை நடத்தியுள்ளார். ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, ராஜா ஆகியோர் வரிசையில், நள்ளிரவில் செயின் பறிப்பு கொள்ளையன் <<15888455>>ஜாபர் குலாம் ஹூசைன்<<>> என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். இதனை பலர் வரவேற்ற நிலையில், கமிஷனர் அருணை சிலர் விமர்சித்தும் வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News March 26, 2025
மெகுல் சோக்ஷியை நாடு கடத்த இந்தியா முயற்சி!

பஞ்சாப் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்ஷி, பெல்ஜியத்தில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை பெல்ஜியம் அரசுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே வழக்கில் தேடப்பட்டு வரும் அவரது உறவினரான நிரவ் மோடியும் விரைவில் லண்டனில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
News March 26, 2025
அதிமுக மூத்தத் தலைவர் காலமானார்

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கருப்புசாமி பாண்டியன் (76) உடல்நலக்குறைவால் காலமானார். MGR காலம் தொட்டு அ.தி.மு.கவில் பணியாற்றிய இவர் ‘கானா’ கருப்பசாமி பாண்டியன் என அழைக்கப்பட்டார். அதிமுகவில் நெல்லை மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய இவர், அதிமுகவிலிருந்து விலகி 2006 – 2011 தென்காசி தொகுதியில் திமுக MLAஆக இருந்தார். பின்னர், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.