News March 24, 2025
குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு: அன்புமணி தாக்கு

மதுரையில் திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, திமுக அரசை அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். கொலை குற்றங்களைத் தடுத்து சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருப்பதாக சாடிய அவர், இனியாவது திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 26, 2025
சிறுபான்மை மக்களுக்கு திமுக என்ன செய்தது? அண்ணாமலை

சிறுபான்மை மக்களுக்காக தான் செய்ததை திமுகவால் கூற முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துக் கட்சிகளிலும் சிறுபான்மை தலைவர்கள் இருப்பதாகவும், திமுக மட்டுமே முஸ்லிம்களுக்கு நல்லது செய்வதை போல பொதுமக்களை ஏமாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். இதுவரை பாஜக கூட்டணி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக எந்த விதத்திலும் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 26, 2025
குழந்தைகளுக்கு பாதாம் பிசின் கொடுக்கலாமா?

கோடைக்காலத்தில் சர்பத், ஜூஸ் போன்றவற்றில் ஊற வைத்த பாதாம் பிசினை சேர்த்துக் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். வடமாநிலங்களில் பிரசவமான பெண்களுக்கு கோந்து லட்டு கொடுப்பது வழக்கம். இது பெண்களின் உடல் வலிமைக்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை எந்த வயதினரும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அடிக்கடி சளி, வீஸிங் பிரச்னைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பாதாம் பிசினை கொடுப்பதை தவிர்க்கலாம்.
News March 26, 2025
பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்: தினகரன்

தமிழக அரசியலில் அண்ணாமலை நெருப்பாக செயல்பட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்ணாமலை எதிரிகளுக்கு அக்னியாக இருந்தாலும், பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் அண்ணாமலையார் தீபம் போன்று இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். அண்ணாமலை பெயரை சொன்னாலே திமுக நடுங்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.