News March 24, 2025
ஆயல்: பள்ளி மாணவி திருமணம் நிறுத்தம்

ஆயல் கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கும் உறவினரான ஜோதிஸ்வரன் 22 என்பவருக்கும் மார்ச் 24ம் தேதி திருமணம் நடக்க இருந்தது இந்த தகவல் மாவட்ட சமூக நலத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது பாணாவரம் போலீசார் சமூக நலத்துறை அதிகாரிகள் வருவாய்த் துறையினர் குழந்தை உதவி மையப் பணியாளர் இணைந்து இன்றிரவு திருமணத்தை தடுத்து நிறுத்தினர்
Similar News
News April 10, 2025
ராணிப்பேட்டை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மேலும் இன்று ஏப்ரல் 10, நாளை ஏப்ரல் 11 மேலும் 1 டிகிரி வெயில் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்கம் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உணர முடியும் என்று தெரிவித்துள்ளது.
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <
News April 10, 2025
ராணிப்பேட்டையில் பயிற்றுநர் வேலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. பயிற்றுநர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் dsorpt@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு ஏப்ரல் 20 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.