News March 23, 2025

இரவு 11 மணிக்கு மேல் தூங்குகிறீர்களா?

image

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் தூங்கும் நேரமே குறைந்துவிட்டது. முடிந்தவரை தூங்க முயற்சிக்கிறோம். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். லேட்டாக தூங்குவதால் உங்கள் தூக்கத்தின் தரம் பாதிக்கும், ஜீரணமும் சரியாக இருக்காது, தூங்கி எழுந்த பின்பும் சோர்வாக உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது மிகவும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.

Similar News

News December 19, 2025

356-வது வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை

image

தேர்தல் நெருங்கும் நேரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட <<18609145>>நர்ஸ்களை<<>> கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகும் நேரத்திலும் நர்ஸ்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். கைது செய்த நர்ஸ்களை நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய்விட்டது அராஜகம் என்றும் அவர் கண்டித்துள்ளார்.

News December 19, 2025

24,000 பாக். பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி!

image

பிச்சையெடுப்பதை தொழிலாகவே மாற்றிய 24,000 பாகிஸ்தானியர்களை சவுதி அரேபியா, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதேபோல, துபாயில் இருந்து 6,000 பேர், அஜர்பைஜானில் இருந்து 2,500 பாக்., பிச்சைக்காரர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காரணங்களை சுட்டிக்காட்டியே UAE-யும், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவிற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

News December 19, 2025

PR பாண்டியனின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

image

<<18489198>>பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை<<>> மெட்ராஸ் HC நிறுத்திவைத்துள்ளது. ONGC சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில் தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமின் கோரியும் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். மெட்ராஸ் HC உத்தரவால், அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!