News March 23, 2025
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 18, 2025
புதுவை: 10th போதும் ரூ.69,100 சம்பளம்

புதுவை மற்றும் காரைக்கால் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28, OBC–26)
5. கடைசி தேதி: 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை SHARE செய்து வேலை தேடுபவர்களுக்கு உதவுங்க…
News December 18, 2025
புதுச்சேரி: வாய்க்காலில் தவறி விழுந்த பசுமாடு

புதுச்சேரி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபம் அருகில் உள்ள பெரிய சைடு வாய்க்காலில் பசுமாடு ஒன்று நேற்று தவறி விழுந்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்களால் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த ஊழியர்கள் அரியாங்குப்பம் காவல்துறை ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டு, தீயணைப்புத் துறை வரவழைத்து வெகு நேரமாக உயிருக்குப் போராடிய அந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
News December 18, 2025
புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


