News March 23, 2025
அரசு ஊழியர்களின் தொடரும் போராட்டம்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். வருகிற 30ம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கின்றனர்.
Similar News
News March 26, 2025
மார்ச் 27: வரலாற்றில் இன்றைய தினம்

1964 – வட அமெரிக்காவின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 125 பேர் உயிரிழந்தனர்.
1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் விமான விபத்தில் உயிரிழந்தார்.
2009 – இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
2016 – லாகூரில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலியானார்கள்.
News March 26, 2025
ORS கரைசலை எப்போதெல்லாம் அருந்தலாம்?

ORS கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி இருப்பவர்களுக்கு நீர்ச்சத்துக் குறைபாடு அதிகம் ஏற்படும். இதனை தடுக்க ORS கரைசலை கொடுக்கலாம். மேலும் கோடைக் காலங்களில் ஏற்படும் நீர் வறட்சியைத் தடுக்கவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
News March 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.