News March 23, 2025
அம்பானிக்கு தலைவலியாய் அமைந்த Pepsi, Cocacola

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பா கோலாவை சமீபத்தில் சந்தைப்படுத்தியது. 200ML சர்க்கரை இல்லா கேம்பா ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது Coca cola,pepsi நிறுவனங்களுக்கு சர்க்கரை இல்லாத 200ML பாட்டில்களை ₹10க்கு களமிறங்கியுள்ளனர். மிகப்பெரிய நிறுவனங்களான Coca Cola, Pepsi தற்போது அம்பானிக்கு பெரும் தலைவலியாய் மாறியுள்ளன.
Similar News
News October 20, 2025
சொந்தமா இடம் வாங்குவதற்கு முன் இது முக்கியம்

சொந்தமாக வீட்டு மனை வாங்குவது என்பது பலரின் கனவு. அப்படிப்பட்ட கனவை நனவாக்கும்போது, சில விஷயங்களில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனை வாங்குவதற்கு முன் நீங்க கவனம் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்பதை தொகுத்து வழங்கியுள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை Swipe செய்து தகவல்களை பாருங்கள். SHARE IT.
News October 20, 2025
மிக கனமழை வெளுத்து வாங்கும்:IMD

தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இது 48 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்.
News October 20, 2025
இயக்குநர் அவதாரம் எடுத்த விஷால்

‘மகுடம்’ படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இது கட்டாயத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்ற அவர், பொறுப்பின் காரணமாக எடுக்கப்பட்டதே எனவும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கும் கடமைப்பட்டு, இப்படத்தை நிறைவாக இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரிலீஸாகியுள்ளன.