News March 23, 2025
இரவு 10 மணி வரை மழை கொட்டும்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில், இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஒன்றிரண்டு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும்.
Similar News
News March 28, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹840 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) சவரனுக்கு ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,340க்கும், சவரன் ₹66,720க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ₹3 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹114க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது. கடந்த வார இறுதியில் தங்கம் விலை சரிந்த நிலையில், இந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
News March 28, 2025
CA தேர்வு முறையில் மாற்றம்!

மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில், CA தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்து இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த CA இறுதித்தேர்வு, Intermediate, Foundation தேர்வுகளும் இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 28, 2025
விரல் ரேகை பதிந்தால் மட்டுமே GAS சிலிண்டர்?

சமையல் GAS சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மானிய விலை சிலிண்டர் பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் GAS ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிய வேண்டும். இப்பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.