News March 23, 2025
ரோஹித் சர்மா டக் அவுட்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து, களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். கலீல் அகமது வீசிய பந்தில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பியுள்ளார்.
Similar News
News March 28, 2025
‘அப்பா’ ஸ்டாலின்: விஜய் பேச்சால் அதிர்ந்த அரங்கம்!

தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து விஜய் பேசினார். நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தா, பெண்களின் பாதுகாப்பு நல்லா இருந்திருக்கும். ஆனா, இன்னைக்கு பச்ச புள்ளைங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொன்னுங்க, வேலைக்கு போற பொன்னுங்களுக்கு நடக்குற கொடுமைய வாய்விட்டு சொல்ல முடியல சார். இதுல வேற உங்கள எல்லோரும் அப்பானு வேற கூப்பிடுறதா சொல்றீங்க என விஜய் பேசினார்.
News March 28, 2025
IPL: CSK அணி முதலில் பந்துவீச்சு…!

சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான CSK அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான RCB அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட உள்ளன. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகின்றன. இதுவரை 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், CSK 21 முறை, RCB 11 முறை வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?
News March 28, 2025
45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.