News March 23, 2025
‘எல் கிளாசிக்கோ’ எப்படி வந்தது தெரியுமா?

ஸ்பெயின் மொழியில் எல் கிளாசிக்கோ என்பதற்கு ஆங்கிலத்தில் The Classic என்பது பொருள். இந்த வார்த்தை அங்குள்ள கால்பந்து கிளப் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் மோதும்போது பயன்படுத்தப்படுகிறது. இப்படி சிறந்த அணிகள் மோதும் நிகழ்வை, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் எல் கிளாசிக்கோ எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இதுதான் IPL-ல் CSK vs MI போட்டியை ரசிகர்கள் அப்படி அழைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
Similar News
News August 13, 2025
ஒரே வீட்டில் 269 வாக்காளர்கள்

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், முசாஃபர்பூரில் உள்ள ஒரு வீட்டில் 269 வாக்காளர்கள் இருப்பதாக ECI தரவு வெளியிட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரேயொரு வாக்கு மட்டுமே உள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இது BJP – ECI வாக்கு முறைகேட்டிற்கான சான்று என காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
News August 13, 2025
ஆக.. தனிப்பட்ட காரணம் என்று சொல்லக்கூடாது: இபிஎஸ்

அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ‘ஆக.. தனிப்பட்ட காரணம்’, Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்து கொள்ளட்டும் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் பையில் வெடிகுண்டு வெடித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
News August 13, 2025
சஞ்சுவுக்கு பதில் ஜடேஜாவைக் கேட்கும் RR

IPL 2026 சீசனில் சஞ்சு சாம்சனை வாங்க CSK மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சஞ்சுவை கொடுப்பதாக இருந்தால் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை RR நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அணியின் தளபதியாக விளங்கும் ஜடேஜாவை கேட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும், ஜடேஜாவை CSK விட்டுக்கொடுக்காது என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உள்ளதாம்.