News March 23, 2025
CSK VS MI: இதுவரை ஆதிக்கம் செலுத்தியது யார்?

IPL-ன் எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த சீசன்களில் நடைபெற்ற போட்டிகளில் மும்பை அணியின் கையே ஓங்கி இருந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 37 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், 20 முறை மும்பையும், 17 முறை சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?
Similar News
News March 26, 2025
ரன்பிர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி

ரன்பிர் கபூர் நடிக்கும் பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி கதையம்சத்தில் இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது கீர்த்தி நடிக்கும் 2-வது ஹிந்தி படமாகும். முன்னதாக, ‘தெறி’ படத்தின் ரீமேக்கில், வருண் தவான் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
News March 26, 2025
4 வயது சிறுவனை கொன்ற 12 வயது சிறுமி

போபாலில் 12 வயது சிறுமியுடன் விளையாடிய 4 வயது சிறுவன் மாயமாகி இருக்கிறான். அதன்பின், சிறுமி முன்னுக்கு பின் முரணாக பல பதில்களை கூறியிருக்கிறார். இதனையடுத்து, சிறுமியை விசாரித்த பெண் போலீஸ், சாமி வந்தது போல நாடகமாடியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த சிறுமி, சிறுவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார். 50 போலீசார் தேடியும் கிடைக்காத சிறுவன், இறுதியில் நாடகத்தின் மூலம் பிணமாக மீட்கப்பட்டான்.
News March 26, 2025
பாஸ் என்கிற பாஸ்கரன் 2ஆம் பாகம் அப்டேட்

15 ஆண்டுகளுக்கு பிறகு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தானும், ஆர்யாவும் ஈடுபட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதற்காக நல்ல கதையை உருவாக்கி உள்ளதாகவும், ஆர்யா- நயன்தாரா- சந்தானம் காம்பினேஷன் மீண்டும் அமைந்தால் செம்மையாக ஒர்க் அவுட் ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், சந்தானத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.