News March 23, 2025
மீண்டும் ட்ரெண்டிங்கில் காவ்யா மாறன்!

SRH அணியின் ஓனர் காவ்யா மாறன் தான் தற்போது டாப் ட்ரெண்டிங். மைதானத்தில் அவரைக் காணவே ஒரு ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கிறது. இன்று SRH அணி, 286 ரன்களை விளாசி சாதித்த போதிலும், ட்ரெண்டிங் என்னவோ காவ்யா தான். SRH அணி ஜெர்சியில், கூலர்ஸ் ஒன்றை அணிந்து கூலாக மைதானத்தில் அமர்ந்து அணியை உற்சாகப்படுத்த அவரைப் பார்த்து ரசிகர்களை குஷியாகி இருக்கிறார்கள்.
Similar News
News March 26, 2025
சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ் – குவியும் பாராட்டு

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சதமடிக்க வாய்ப்பிருந்தும் அதனை தியாகம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இறுதி ஓவரில் விளையாடியபோது, ‘எனது சதத்தை பார்க்காதே, நீ விளையாடு’ என தன்னிடம் கூறியதாக ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். தனது முதல் சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ் ஐயரை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளுகின்றனர்.
News March 26, 2025
ரன்பிர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி

ரன்பிர் கபூர் நடிக்கும் பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி கதையம்சத்தில் இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது கீர்த்தி நடிக்கும் 2-வது ஹிந்தி படமாகும். முன்னதாக, ‘தெறி’ படத்தின் ரீமேக்கில், வருண் தவான் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
News March 26, 2025
4 வயது சிறுவனை கொன்ற 12 வயது சிறுமி

போபாலில் 12 வயது சிறுமியுடன் விளையாடிய 4 வயது சிறுவன் மாயமாகி இருக்கிறான். அதன்பின், சிறுமி முன்னுக்கு பின் முரணாக பல பதில்களை கூறியிருக்கிறார். இதனையடுத்து, சிறுமியை விசாரித்த பெண் போலீஸ், சாமி வந்தது போல நாடகமாடியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த சிறுமி, சிறுவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார். 50 போலீசார் தேடியும் கிடைக்காத சிறுவன், இறுதியில் நாடகத்தின் மூலம் பிணமாக மீட்கப்பட்டான்.